ஜெயலலிதா பற்றி பேரறிவாளன் எழுதியுள்ள உருக்கமான கடிதம்

வேலூர்: தனது தாயின் கண்ணீரைப் பரிவுடன் துடைத்துவிட்டு ஆறுதல் கூறியவர் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என பேரறிவாளன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறை வையொட்டி எழுதியுள்ள உருக்கமான கடிதம் ஒன்றில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி, சிறை வைக்கப் பட்டுள்ள 7 பேரும் விடுவிக்கப் பட வேண்டும் என்பதில் சாமானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டவர் ஜெயலலிதா என்று பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

"ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னை யோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்தேன். இந்நிலையில், கடற்கரை மணல் பரப்பில், கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன்? "என் தாய் அவரைச் சந்தித்த போது, 'அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன்தான் உங்களுடன் சேரப்போகிறாரே.. கலங்காதீர் கள்..!' என என்னை ஈன்றவள் கரம் பற்றி ஒருதாயின் பரிவோடு கண்ணீர் துடைத்துவிட்ட 'அம்மா', எம்மை துயரக்கடலில் தள்ளிவிட்டு வங்கக் கடலோரம் நிரந்தரமாகத் துயிலப் போய்விட் டார்," என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார் பேரறிவாளன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!