மின்சாரம், தண்ணீருக்கு சென்னை மக்கள் தவிப்பு

சென்னை: வர்தா புயல் சென் னையைச் சிதைத்துச் சென்றுள்ள நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்க ளுக்கும் மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் திங்கட் கிழமைக்குள் மின் விநியோகம் சீரடையும் என அமைச்சர் பி.தங்க மணி உறுதியளித்துள்ளார். வர்தா புயல் சென்னையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் புயலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சாய்ந்ததால், மின் விநியோகம் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால், அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடோ, எதுவாக இருந்தாலும் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி, மேல்நிலை தொட்டிக்குக் கொண்டு செல்ல முடியாமல் மக்கள் தவிக் கிறார்கள். இதைப் பயன்படுத்தி சிலர் டீசலில் இயங்கும் மோட்டார் பம்பு இயந்திரங்களுடன் சென்று, மேல் நிலைத் தொட்டிக்கு நிலத்தடி தண்ணீரைக் கொண்டு செல்ல ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய் எனக் கட்டணம் வசூலிக் கிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!