அதிமுகவில் அடுத்த முழக்கம், ‘முதலமைச்சர் சசிகலா’

மறைந்த ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவும் மாநில முதலமைச்சர் பதவியையும் அதிமுக பொதுச் செயலாளர் பதவியையும் வகிக்க வேண்டும் என்று புதிய முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இம்மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமான சில நாட்களி லேயே அதிமுகவின் தலைமை ஏற்கும் வகையில் பொதுச் செய லாளர் பொறுப்பை சசிகலா நட ராஜன், 60, ஏற்க வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கி வலுப்பெற்று வருகிறது. அதிமுக அமைச்சர்களும் நிர் வாகிகளும் சசிகலாவே கட்சித் தலைமை ஏற்பார் என்று ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர். மாவட்டந்தோறும் உள்ள கட்சிக் குழுக்கள் சசிகலாவை முன் னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அதனை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

அதிமுகவின் துணை அமைப்பு களான எம்ஜிஆர் மன்றம், எம்ஜி ஆர் இளையர் அணி, விவசாயப் பிரிவு, சிறுபான்மைப் பிரிவு, இலக் கிய அணி போன்றவையும் சசி கலா பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றி உள்ளன. அதேநேரம் ஓ. பன்னீர்செல்வம் வகித்துவரும் முதலமைச்சர் பதவி பற்றி இதுவரை வாய் திறக்காத அதிமுகவினர் முதல் முறையாக சசிகலா முதலமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர்.

குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத் தின் தேனி மாவட்டத்தில்தான் இத்தீர்மானம் இயற்றப்பட்டுள் ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஒன்றுகூடி ஆட்சிக்கும் கட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தேனி மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கத் தமிழ் செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!