ராகிங் கொடுமையால் தலித் மாணவரின் சிறுநீரகம் பாதிப்பு; ஐவர் சரண்

கோட்டயம்: கேரள மாநிலம், கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலித் மாணவர் ஒருவர் ராகிங் கொடுமைக்கு ஆளாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வழக்கில் 5 மூத்த மாணவர்கள் சரண் அடைந்துள்ளனர். டிசம்பர் 2ஆம் தேதி இரவு கல்லூரி யின் மாணவர் விடுதியில் நடந்த இந்த ராகிங் கொடுமையில் ஒரு மாண வருக்குச் சீறுநீரகம் பாதிக்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தலித் மாணவருக்கு இதுவரை 3 முறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த அந்த மாண வரின் பெயர் அவிநாஷ். அவரையும் மேலும் 8 மாணவர்களையும் மூத்த மாணவர்கள் கடந்த 2ஆம் தேதி இரவு நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் தரையில் நீச்சல் அடித்தல், குதித்தல் போன்ற கடும் பயிற்சி களைச் செய்யுமாறு மூத்த மாணவர்கள் கட்டாயப்படுத்தி யுள்ளனர். இதுபோல் சுமார் 5 மணி நேரம் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அப்போது அந்த மாணவர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டபோதும் அவர்களை மூத்த மாணவர்கள் விட வில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், திருச்சூரில் உள்ள ராகிங் கொடுமையால் தலித் மாணவரின் சிறுநீரகம் பாதிப்பு; ஐவர் சரண் தனது வீட்டுக்கு வந்த அவிநா‌ஷின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவினா‌ஷுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவர மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவினாஷ். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!