பதவி விலகச் சொல்லும் அமைச்சர்கள்; நடவடிக்கை

எடுக்கத் தயாராகும் முதல்வர் சென்னை: தனக்கு எதிராகச் செயல்படும் அமைச்சர்களைக் களையெடுக்க முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் முடிவு செய்திருப்ப தாக வெளியான தகவலால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். எனினும் அடுத்த சில தினங்களிலேயே அவர் தமது பதவியை சசிகலா நடராஜனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் குரல் எழுந்தது. முதலில் அதிமுக மாவட்டச் செயலர்களும் பின்னர் தமிழக அமைச்சர்கள் சிலரும் இக்கோரிக் கையைப் பகிரங்கமாக முன்வைத்த னர்.

குறிப்பாக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமார், தங்கமணி உள்ளிட்டோர் கட்சி யினர் மத்தியில் தங்களது எண் ணத்தை வெளிப்படுத்தி "அடுத்த முதல்வர் சசிகலா" என்று ஆணித்தரமாகக் கூறி வந்தனர். இதனால் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பு கடும் அதிருப்தி யில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தன்னை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பன்னீர்செல்வம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. "ஜெயலலிதாவின் மரணத்தை யடுத்து அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என சில அமைச்சர்கள் நம்பிக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால் அமைச்சர வையை மாற்றும் அதிகாரம் தற்போது சசிகலாவிடம் இல்லை. அது இன்னும் முதல்வர் வசமே உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!