தலைமைச் செயலர் வீட்டில் சோதனை: மம்தா எதிர்ப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமைச்செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் நடத் தப்பட்ட சோதனைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண் டனம் தெரிவித்துள்ளார். இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அவர் சாடியுள்ளார். "ஏற்கெனவே டெல்லி தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது தமிழகத் தலை மைச் செயலர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதா கக் கேள்விப்பட்டேன். "நியாயமற்ற மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது? "கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைக்கச் சோதனை நடத்தப்படுகிறதா? பணத்தைக் குவித்து வரும் பாஜக தலைவர் அமித்ஷா வீட்டில் ஏன் அவர்கள் சோதனை நடத்தவில்லை?" என மம்தா சரமாரிக் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!