ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டங்களை ஸ்டாலின் தெரிந்துகொள்ளவேண்டும் - சசிகலா

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலர் சசிகலா தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலரான பிறகு, அரசியல் தொடர்பான முதல் அறிக்கையை நேற்று சசி கலா வெளியிட்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரடியாக அவர் தாக்கினார். "ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஜெய லலிதா அப்போதே கடிதம் எழுதி னார். ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டங்களை ஸ்டாலின் தெரிந்துகொள்ளவேண்டும். "உண்மையை மூடிமறைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவேண் டாம்," என்று சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மத்திய அமைச்சர் பென்.ராதா கிருஷ்ணன், "மத்தியில் காங் கிரஸ்=திமுக ஆட்சி நடந்தபோது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. "இவ்விரு கட்சிகளின் தவறால் தான் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. ஆனால் இப்பேது இவர்களே பேராட்டம் நடத்துவது வேடிக் கையாக உள்ளது," என்றார். தமிழகத்தில் நெடுங்காலமாக நடந்துவந்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டை விலங்குவதை என்று சொல்லி இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்து வருகிறது. தடையை மீற முயற்சிகள் நடக்கின்றன. இந்தப் போராட்டம் இப்போது முற்றி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!