உயர்ந்த நிலையில் இந்திய பொருளியல்

புதுடெல்லி: இந்திய பொருளியல் உலகளவில் சிறந்துவிளங்கு வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள் ளார். டெல்லியில் நிதிநிலைத் தன்மை மற்றும் வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அருண் ஜெட்லி, மத்திய அரசு கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் நாட்டின் பொருளா தாரத்தை நிர்ணயிக்கும் பெரும் முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்கள் நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியை அதிகரிக்க உதவும் என்றும் வங்கிகளில் பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள் ளதாகவும் அவர் கூறினார். பணமில்லாப் பரிவர்த்தனை மூலம் நாட்டில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!