அனுமதியற்ற சாலையில் பயணம், தடுத்த காவலரின் கன்னத்தில் ‘பளார்’

மும்பை: போக்குவரத்துக்கு அனுமதி இல்லாத (No Entry) சாலையில் சென்ற தம்பதியரைத் தடுத்து நிறுத்திய போக்கு வரத்து காவலரின் கன்னத்தில் பெண் ஒருவர் பலமாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. மகபே சந்திப்பில் தானே =பெலாபூர் சாலையில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக அந்தத் தம்பதியர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. சோபன் அவ்ஹாத், 26, அவரது மனைவி சப்னா பாட்டீல், 29, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 7.45 மணி யளவில், போக்குவரத்துக்கு அனு மதி வழங்கப்படாத சாலையில் காரில் சென்றுள்ளனர்.

காரை சோபன் ஓட்டியுள்ளார். இதைக் கண்ட போக்குவரத்து காவலர் பிரிதேஷ் பகதுஸ் கொடியசைத்து காரை நிறுத்தி னார். இதனால் ஆத்திரமுற்ற சப்னா காரில் இருந்து இறங்கி காவலர் பிரிதே‌ஷின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விளக் கிய மூத்த காவல் அதிகாரி ராமசந்த்ரா தேஷ்முக், "காரை நிறுத்துமாறு காவலர் தடுத்தும் அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. போலிசிடம் சிக்கிவிடா மல் தப்பிக்க சோபன் எண்ணி யுள்ளார். "இருப்பினும், காரை மேற் கொண்டு செல்லவிடாமல் தடுத்த காவலரை சப்னா அறைந் ததுடன் அடியாட்களை வைத்து தாக்கப்போவதாகவும் மிரட்டியுள் ளார்," என்று தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!