சசிகலா தலைமையை ஆதரித்து உரையாற்றுவேன் - நாஞ்சில் சம்பத்

சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு சசிகலா நடராஜன் தகுதியற்றவர் என்று கூறி வந்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், தற்போது திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கட்சிப் பணியாற்றப்போவதாக அவர் அறிவித்துள்ளார். நேற்று அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார் நாஞ்சில் சம்பத். அப்போது அவரை சசிகலா தரப்பினர் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுடனான சந்திப்பு தமக்கு மனநிறைவைத் தருவதாகவும், மீண்டும் கட்சிப் பணிகளுக்காக தீவிரமாக களம் இறங்கப்போவதாகவும் தெரிவித்தார். "தமிழ்நாடு முழுவதும் எட்டுத் திசைகளிலும் சுற்றிச்சுழன்று சசிகலா தலைமையை ஆதரித்து உரையாற்றுவேன்.

அதிமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைப்பேன். "வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற பிரசாரம் செய்வேன். தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் எனது பிரசார வியூகம் இருக்கும்," என்றார் நாஞ்சில் சம்பத். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவுக்கு பிறகு தாம் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் எதிரொலி யாகவே பொது வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்ததாக கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!