வெளிநாடுவாழ் இந்தியர்கள் டுவிட்டரில் சுஷ்மாவுக்கு புகார் தெரிவிக்கலாம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் டுவிட்டர் மூலம் புகார் அனுப்பி தீர்வு காண மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் 150 நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை ஒருங்கிணைத்து 'இந்தியா மிஷன்' எனும் டுவிட்டர் வலைத்தளக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்களது விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் சிக்கல் நேர்ந்தாலோ, உடல்ரீதியான சிரமங்களை எதிர் கொண்டாலோ சம்மந்தப்பட்ட நாட்டிலுள்ள தூதரகங்களின் டுவிட்டர் பக்கத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். உங்களது புகார்களுடன் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் முகவரியான @SushmaSwaraj என்ற பெயரை இணைத்தால் நேரடியாக உங்கள் கோரிக்கையை நான் கண்காணிப்பேன். மிகவும் அவசரமான நடவடிக்கை தேவையெனில் #sos என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தலாம் எனவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!