எடியூரப்பா: காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி

பெங்களூரு: கர்நாடகக் காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மேல் மன்றத்தில் காலியாக உள்ள தென்கிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவான பிரசார கூட்டம் துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா இவ்வாறு பேசினார்.

"கர்நாடகாவில் எல்லாத் துறைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. மாநில அரசு திப்பு சுல்தான் ஜெயந்தியைக் கொண்டாடக் காட்டிய ஆர்வத்தை வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் காட்டவில்லை. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது," என்று எடியூரப்பா பேசினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!