ஜல்லிக்கட்டுக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு

கோவை: தமிழகத்தில் வழக்கத் தில் இருந்த ஜல்லிக்கட்டு விளை யாட்டு, தமிழ் இளைஞர்கள் தங் கள் ஆற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறி உள்ளார். தமிழக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப் பது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "பெண்ணுக்கு அழகு எப்ப டியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தினசரி வாழ்வில் தங்களது வீரத் தையும் செயல்திறனையும் ஆற்ற லையும் வெளிப்படுத்த கிராம இளைஞர்கள் தங்களுக்கு இருந்த வழிவகைகளை இன்று இழந்தி ருக்கிறார்கள்.

"உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் யாவும் ஜல்லிக் கட்டு விளையாட தேவையான அடிப்படைக் குணங்கள். இதனால் மது, போதைப் பொருள் போன்ற தீய பழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்," என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இந்தியக் கலாசாரத்தில் மாடுகள் வெறும் விலங்காக பார்க்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழர் வாழ்வில் பல அம்சங்களில் மாடுகள் அங்கம் வகிப்பதாகச் சுட்டிக் காட்டி உள்ளார்.

"ஒரு மிருகத்தின் உயிரை எடுப்பது கொடுமை அல்லவா? ஆனால், அதுகுறித்து யாருக்கும் கவனம் இல்லை. உணவுக்காகக் கூட அவற்றைக் கொல்வதில்லை, ஏற்றுமதி செய்வதற்காக கொல்கி றார்கள். உலகிலேயே அதிக மாட் டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தி யாதான். இது வெட்கக்கேடான விஷயம். தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான மகிழ்ச்சியை அழிக்கப் பார்ப்பது முறையல்ல. ஜல்லிக்கட்டு உயிர்ப் புடன் இருக்க வேண்டும். எதிர் காலத்திலும் இது மிகுந்த சிறப் புடன் நடக்க வேண்டும்," ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!