கி.வீரமணி: தீபாவை தூண்டி விடுகிறது பாஜக

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் ஏற்படவில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், சசிகலா நடராஜனை வீழ்த்தும் நோக்கத்திலேயே அவருக்கு எதிராக ஜெயலலிதாவின் அண் ணன் மகள் தீபாவை பாஜக தூண்டி விடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "என்ன காரணத்துக்காக சசி கலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற் காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கொள்கைகளுக்கு எதி- ராக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை.

"இந்த இருவரின் ஆட்சியில் தான் 31 விழுக்காடு இட ஒதுக் கீடு 69 விழுக்காடாக உயர்ந்தது. அவர்கள் வழியில் அதிமுகவை வழி நடத்த பிராமணர் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா- வால் முடியும் என நம்புகிறோம்," என வீரமணி தெரிவித்துள்ளார். சசிகலாவை எதிர்க்க வலிமை யான தலைவர்கள் இல்லாத நிலையில் உறவு என்ற பெயரில் தீபாவை பாஜக மறைமுகமாகத் தூண்டி விடுவதாகச் சாடியுள்ள அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

"ஜெயலலிதாவின் உறவினர் என்பதைத் தவிர தீபாவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால், சசிகலா கடந்த பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து அவரது அரசியல் வியூகங்களை உணர்ந்தவர். அது செயல் வடிவம் பெற பெரும் பங்காற்றியவர். எனவே, தீபாவுடன் சசிகலாவை ஒப்பிடுவதே பெரும் தவறு," என்று வீரமணி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்கு தனியாக ஒரு ஆளுநரை நியமிக்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!