ஜல்லிக்கட்டு நடத்தியோர் மீது தடியடி: தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியமைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளனர். அலங்காநல்லூரை தனித் தீவாக மாற்றி கொடூரமான முறை யில் தடியடி நடத்தப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கை ஒன்றில், தமிழர் களின் பாரம்பரிய வீர விளை யாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தமி ழர் திருநாளான பொங்கல் விழா வில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக இளை யர்கள் தன்னெழுச்சியாக அணி திரண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.

"தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாத கமான விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் 'விலங்குகளை வதை செய்பவையல்ல' என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதை உணர வேண்டும்," என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!