ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: மோடி கைவிரிப்பு

அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக் கட்டு நடத்த வழி அமைத்துக் கொடுப்பார் என்று தமிழக மக்கள் நம்பியிருந்த நிலையில் 'இப்போ தைக்கு அதற்கு வழியே இல்லை' என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைவிரித்துவிட்டதால் தமி ழகம் முழுவதும் போராட்டம் சூடு பிடித்திருக்கிறது. பிரதான ஜல்லிக்கட்டுத் தள மான அலங்காநல்லூரில் விடாப் பிடியாகப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு ஆதர வாக சென்னை மெரினா கடற் கரையிலும் தமிழக இளையர்கள் இரவு பகல் பாராது அறப்போ ராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதைக் கண்டு, மதுரை, நெல்லை, கோவை, சேலம் எனத் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. வெளிநாட்டுவாழ் தமிழர்களும் தாங்கள் வசிக்கும் நாடுகளில் 'தங்களின் பாரம்பரிய ஜல்லிக் கட்டு விளையாட்டு மீதான தடையை ரத்து செய்யவேண்டும்' என ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களின் உணர்வுகளைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று மோடியைச் சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் தமிழர்களின் உணர்வுகளையும் கலாசாரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான அவர் களின் எழுச்சிமிக்க போராட்டத் தையும் மோடியிடம் விவரித்தார் ஓபிஎஸ். அதையெல்லாம் கேட்டுக் கொண்ட மோடி, தமிழர்களின் உணர்வுகளைத் தாம் அறிந்திருப் பதாகவும் அவற்றுக்கு மதிப்பளிப் பதாகவும் கூறினார். இருப்பினும், சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடர்பான வழக்கில் இன் னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் தம்மால் ஒன்றும் செய் வதற்கில்லை என்று திட்டவட்ட மாகச் சொல்லிவிட்டார்.

தமிழக மக்களின் உணர்வுகளை அறிந்திருப்பதாகவும் அவற்றை மதிப்பதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறிய இந்தியப் பிரதமர் மோடி, இருப்பினும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் தம்மால் இப்போது எதுவும் செய்வதற்கு முடியாது என்று கைவிரித்துவிட்டார். படம்: ஏஏஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!