ஜல்லிக்கட்டு: அவசர சட்டம் பற்றி இந்திய வழக்கறிஞர்கள் கருத்து

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி பிரபல வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித் துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்: "ஜல்லிக்கட்டுக் காக தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம். மத்திய அரசு சார்பில் ஒரு சட்டம் உள்ள நிலையில், மற்றும் ஒரு சட்டத்தை கொண்டு வர முதலில் குடியரசுத் தலை வரிடம் முன் அனுமதி பெற வேண்டும். "அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே அந்தச் சட்டத்தை நடை முறைப்படுத்த முடியும். மத்திய அரசு ஆலோசனைப்படி அதிபர் செயல்பட வாய்ப்பு உள்ளது. "ஜல்லிக்கட்டுத் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன் றத் தில் நிலுவையில் உள்ளது. எனவே மாநில அரசின் அவசரச் சட்டம் சாத்தியமானதா என்று தெரியவில்லை.

"அதே சமயத்தில் மத்திய அரசு நினைத்தால் ஜல்லிக் கட்டுக்கு மிக எளிதாக அனுமதி கொடுக்க முடியும். கடந்த 2011ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப் பட்ட பட்டி ய லில் காளை சேர்க்கப் பட்டது. "அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்கி புது அறிவிக்கை ஒன்றை வெளியிட்டாலே போதும். ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி விட முடியும். இது மிக எளிதான நடைமுறையும் கூட. "காட்சிப்படுத்தப்பட்ட பட்டிய லில் இருந்து காளையை நீக்குவ தற்குச் சட்டத்திருத்தம் எதுவும் தேவை இல்லை. ஒரு சட்டத்தை மாற்றுவதற்குதான் சட்டத்திருத்தம் தேவை. "எனவே புதிதாக ஒரு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடுவதன் மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கிவிட முடியும்," என்று கூறினார் வழக்கறிஞர் விஜயன்.

மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி: "மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடியும். முக்கிய பிரச்சினைகளில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கு இதற்கு முன்பு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வருவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை," என்றார். அரசியலமைப்பு சட்ட நிபுணர் கோலி சொரப்ஜி: கலாசாரம், பண்பாடு போன்ற வி ஷயங்களில் மக்களின் உணர்வுகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். இந்த வி ஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அவசர கதியில் செயல்படக்கூடாது. தற்போதைய சூழ்நிலையில் அவசரச் சட்டம் கொண்டு வருவது மேலும் ஒரு சர்ச்சைக்கு வழி வகுக்கும். தற்போது நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்த்து விட்டு, அதன் பிறகு இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!