கலவர பூமியான தமிழகம்

உலகமே வியந்து பார்க்கும் வகை யில் தமிழகத்தில் அமைதியாக, அறவழியில் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நேற்று திசைமாறியது. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத் திற்கு மத்திய, மாநில அரசாங்கங் கள் செவிசாய்த்தன. அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டு, ஒரு சில இடங்களில் ஜல் லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆயினும், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து நிரந்தரத் தீர்வு அளிக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று சென்னை மெரினா கடற்கரை, அலங்காநல்லூர் உட் பட தமிழகத்தின் பல இடங்களி லும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், நேற்றுக் காலை யில் திடீரென போராட்டப் பகுதி களில் அதிகளவில் போலிசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்கள் உடனடியாகக் கலைந்து செல்லும்படி போலிசார் அறிவுறுத் தினர். ஆனால், போராட்டக்காரர் கள் யாரும் அதற்கு ஒப்புக்கொள் ளாததால் அவர்களை வலுக்கட்டா யமாக வெளியேற்றும் பணிகளை போலிசார் மேற்கொண்டனர். இதைத் தடுக்கும் விதமாக, மெரினாவில் சாலை ஓரமாக அமர்ந்திருந்த இளையர் கூட்டம் கடலையொட்டித் திரண்டது. ஒரு பிரிவினர், கடலுக்குள் இறங்கி கைகோத்து மனிதச் சங்கிலியாக நின்றனர். போலிசார் நெருங்கி னால் உயிரை மாய்த்துக்கொள்ள வும் தயங்கமாட்டோம் என்று சிலர் மிரட்டியதாகவும் கூறப் பட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி, வானத்தை நோக்கித் துப் பாக்கியால் சுட்டு எனப் பல வழிகளில் போலிசார் மிரட்டிப் பார்த்தும் அவர்கள் பணியவில்லை. கலைந்து சென்ற சிலரும் அங்கு திரும்பி போராட்டக்காரர்களுடன் சேர்ந்துகொண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற முயலும் போலிசார்.

அமைதி வழியில் போராடி வந்த இளையர்களுக்கு மத்தியில் விஷமிகள் ஊடுருவி, போராட்டத்தின் போக்கைத் திசை திருப்பிவிட்டதாகச் சொல்லப் படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!