‘என்னைக் கவிழ்க்க சதி’

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி அமைதியாக அறவழியில் நடை பெற்ற போராட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்துள்ளது. இதில் காயம் அடைந்த எழு பது காவல்துறையினர் உட்பட 160 பேருக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. இவர்களில் இருவருக்கு தலை, கால்களில் காயங்கள் ஏற் பட்டுள்ளன என்று ராயப் பேட்டை அரசு பொது மருத்துவ மனையின் மருத்துவர்கள் கூறியிருக் கின்றனர். இந்தக் கலவரங்களுக்கு இடையே தம்மைக் கவிழ்ப்பதற் காகவே சொந்த அதிமுக கட்சி யைச் சேர்ந்தவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் புலம் பியிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், "முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு ஒருநாள்கூட பன்னீர் செல்வம் நிம்மதியாக இருந்த தில்லை," என்று அவர் தெரிவித்தார்.

"ஜல்லிக்கட்டு பிரச்சினை தலைதூக்கிய பிறகு ஒருசில மணி நேர தூக்கத்தையும் அவர் இழந்துவிட்டார்," என்றார் அவர். திரு பன்னீர்செல்வம் தற் போது 3வது முறையாக முதல் வர் பதவியை ஏற்றுள்ளார். முதல் நாளிலிருந்தே அவ ருக்குக் கட்சியினரின் தொல்லை கள் தொடங்கிவிட்டன. முதல்வர் பதவியைவிட்டு விலகவேண்டும் என்று அக் கட்சியைச் சேர்ந்த சிலர் அறிக் கை வெளியிட்டதால் பன்னீர் செல்வம் நொந்துவிட்டாராம். பதவியைவிட்டு விலகிவிட லாம் என்று முடிவுக்கு வந்த அவர், பின்னர் தமது முடிவை மாற்றிக்கொண்டார். புதுடெல்லியில் பிரதமர் மோடி யைச் சந்தித்தபோது தமிழக நில வரம் குறித்தும் அவர் புலம்பி இருக்கிறார். மேலும் பிரதமரின் பெயரைக் கெடுக்க தமிழகத்தில் நடை பெற்ற சதித் திட்டங்கள் குறித்த ஆதாரங்களையும் மோடியிடம் அவர் கொடுத்துள்ளார் என்று அந்த மூத்த தலைவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். படத்தில் ஒருவரைக் காவல்துறையினர் தாக்குகின்றனர். ஆனால் கலவரத்துக்கு மாணவர்கள் காரணமல்ல என்று கூறியிருக்கும் காவல்துறை ஆணையர், தேச விரோத சக்திகள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, காவல் துறையினரே தீயிட்டுக்கொளுத்தும் காணொளிகளை ஊடகங்கள் வெளி யிட்டதால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆணையர் கூறியுள்ளார். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!