சசிகலா: எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டேன்

சென்னை: அதிமுகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத் தவோ, கட்சியைப் பிளவுபடுத்தவோ, எந்த ஒரு சக்தியாலும் முடியாது என அதிமுக பொதுச் செயலர் சசிகலா நடராஜன் தெரிவித் திருக்கிறார். அதிமுக தலைமைக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க் கொடி உயர்த்தியுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், அக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சசிகலா நடராஜன், தம்மைப் பயமுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி ஈடே றாது என்றார். பன்னீர்செல்வம் கூறுவதை எல்லாம் தமிழக மக்க ளும் அதிமுகவினரும் அறவே நம்பமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வத்தைத்தான் முதல்வர் பதவியில் அமருமாறு கூறினேன். அப்போது பன்னீர் செல்வம் உட்பட பலரும் என்னைத் தான் முதல்வராக வற்புறுத்தினர். நான் அப்போது எந்தப் பதவியையும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதால் ஏற்க மறுத்தேன். "அதிமுக முன்பு பிளவுபட்ட நிலையில் இருந்தபோது, மாற்று அணியில் இருந்து பன்னீர்செல்வம் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்து தான் ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு வழங்கினார்," என்றார் சசிகலா.

எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா. படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!