தாமதம் ஏற்படக்கூடாது: சு.சுவாமி எச்சரிக்கை

புதுடெல்லி: சசிகலா முதல்வராகப் பதவியேற்பது தாமதப்படுமானால், அது அரசியல் அமைப்புக்கு எதி ரான வன்முறையாகக் கருதப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியம் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் நீடித்தால், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவது கடி னம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "அதிமுக பொதுச்செயலர் சசிகலா கண்டிப்பாக முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் தாமதமானால், அது அரசியலமைப்பிற்கு எதிரான வன்முறை. இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும்," என்று சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் தமிழக ஆளுநரை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி உள்ளதாகத் தெரிகிறது. ஆளுநர் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சுவாமி மறைமுகமாக வலியு றுத்தி உள்ளார். முன்னதாக அதிபர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசி யல் நிலவரங்கள் குறித்து விவா திக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி புகார் எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "ஓ.பன்னீர்செல்வத்தைக் கடத் திச் சென்றது யார்? பாஜகதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்ற விமானத்தை தமிழகத்தில் இருந்து மராட்டியம் நோக்கி மோடி திசை திருப்பிவிட்டார். இது புரட்சியா?" என்று அபிஷேக் சிங்வி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி யுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!