அடுத்த பலப்பரிட்சை உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை எதிர்வரும் மே மாதம் 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக வின் இரு அணிகளும் தங்களது பலத்தை வெளிப்படுத்த தேர்தல் களம் கைகொடுக்கும் என்பதால், தேர்தல் பணிகளை இருதரப்பின ருமே துரிதப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. குறைந்தபட்சம் டிசம்பர் இறுதிக் குள் உள்ளாட்சித் தேர்தல் நடை பெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அவ்வாறு நடக்கவில்லை.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!