சட்டமன்ற அத்துமீறல்: வீடியோ ஆதாரங்களை கேட்கிறது நீதிமன்றம்

தமிழக சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் சமூக நீதிக்கான வழக் கறிஞர்கள் பேரவை சார்பிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதி பதி மகாதேவன் ஆகியோர் முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, நம்பிக்கை வாக் கெடுப்பு தொடர்பான (வீடியோ) காணொளிக் காட்சிகளைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்புக்கு நீதி பதிகள் உத்தரவிட்டனர். மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக 'கோல்டன் பே ரிசார்ட்' ஆடம்பர விடுதியில் தங்க வைக்கப்பட்டதற் கான ஆதாரங்கள் தம்மிடம் இருப் பதாக சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் வாதாடிய கே.பாலு தெரிவித்தார். அது தொடர்பான காணொளிப் பதிவுகளையும் திங்கட் கிழமை தாக்கல் செய்யுமாறு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!