பன்னீர்செல்வம்: கட்சி, ஆட்சியை மீட்போம்

சென்னை: ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள கட்சியையும் ஆட்சியையும் மீட்கும் போராட் டத்தில் வெற்றி பெறுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சூளுரைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை யொட்டி ஆர்.கே. நகரில் பல்வேறு உதவிகளை வழங்கி அவர் பேசினார். "எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் நிறைய இன்னல்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் கட்சியை அவர் அரும் பாடுபட்டு வளர்த்தார்.

யாருடைய கைகளில் கட்சியும் ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என முன் னாள் முதல்வர் ஜெயலலிதா பாது காத்து வைத்திருந்தாரோ அவர் களுடைய கட்டுக்குள் இப்போது கட்சியும் ஆட்சியும் சிக்கியிருக் கிறது. "ஜெயலலிதாவின் எண்ணத் துக்கு மாறாக கட்சியும் ஆட்சியும் கை மாறியிருக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்கும் வகையில் ஒரு தர்ம யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறேன். இந்தத் தர்மயுத்தத்தில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்," என்று பன்னீர்செல்வம் சொன்னார்.

ஆர்.கே. நகரில் பேசிய பன்னீர்செல்வம். படம்: தமிழக ஊடகம்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!