அமெரிக்கா-தென்கொரியா பயிற்சி, சீனாவின் கவலை

பெய்ஜிங்: அமெரிக்காவும் தென்கொரியாவும் இந்த வாரம் பெரிய அளவில் ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ள வேளையில் அப்பயிற்சி குறித்து சீனா கவலை கொள்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வட கொரியா கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நவீன ஏவுகணை சோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் வேளையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து மேற்கொள்ளும் இப்பயிற்சி கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று சீனா கவலைப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!