தமிழகத்தை அதிகம் வாட்டும் வறட்சி

இந்தியாவின் தென்மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள தாகவும் அதில் தமிழ்நாடுதான் ஆக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இந்தியாவின் மத்திய நீர் ஆணையம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தென்மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் அளவு வெகுவாகக் குறைந்திருப்பதே இதற்குக் காரணம் என்று ஆணையம் கூறியது. அவற்றில் உள்ள தண்ணீர் அளவு வழக்கத்தைவிட 80 விழுக் காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.

காவிரி ஆற்றை அதிகம் நம்பியிருக்கும் நீர்த்தேக்கங்கள் 14 விழுக்காடு மட்டுமே நிரம்பி உள்ளன. இந்த நீர்த்தேக்கங்கள் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி களின் உயிர்நாடி. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீர் அளவு 65.43 விழுக்காடு குறைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!