சீமான்: ஆர்கே நகரில் களம் இறங்குவேன்

சென்னை: தமிழக அரசியலில் கருணாநிதி ஜெயலலிதா போன்ற பெருந்தலைகள் இல்லாமல் போய் விட்டதை அடுத்து அரசியல் களம் பெரிதும் உருமாறிவிட்டதாகத் தெரிகிறது. திராவிட கட்சிகளில் திமுக மட்டுமே உறுதியான கட்சியாக இருந்து வருகிறது. அதிமுக கட்சி மூன்றாகப் பிரிந்துவிட்டது. அதிமுக தலைவியும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் காலியாக ஆகிவிட்ட ஆர்கே நகரில் அடுத்த மாதம் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாகப் பிரிந்து போட்டியிடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். "ஆர்.கே. நகர் தொகுதியில் தூய அரசியலை நடத்தும் நோக் கில் நாம் தமிழர் கட்சி போட்டி யிடும்," என்று மதுரை விமான நிலையத்தில் பேசிய சீமான் பரபரப்பாக அறிவித்தார்.

"நெடுவாசல் போராட்டம், சேலம் உருக்காலை பிரச்சினை, ஜல்லிக்கட்டு, தாமிரபரணி, அத் திக்கடவு அவினாசி, மீனவர்கள் பிரச்சினை எனத் தமிழகத்தில் போராட்டமே வாழ்கையாக இருப் பதை முன்வைத்து இடைத்தேர் தலை தமது கட்சி எதிர்நோக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!