உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு நெருக்கடி

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த ஐவர் முதல்வர் பதவியை கைப் பற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கவில்லை. தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக வாகை சூடியிருப்பதால் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஐவரிடையே போட்டி பலமாக உள்ளது. இவர்களில் கேஷவ் மவ்ரியா, யோகி அதித்யானாத், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மகேஷ் ஷர்மா, கல்ராஜ் மிஷ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் மத்திய அமைச்சர் உமா பாரதியும் களத்தில் உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!