ஆர்கே நகர் இடைத்தேர்தல்: டிடிவி. தினகரன், மருதுகணேஷ் போட்டி

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக, ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனை அறிவித் துள்ளது. இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். அதேநேரத்தில் எதிர்க்கட்சி யான திமுக, ஆர்.கே. நகர் திமுக பகுதிச் செயலாளராக இருக்கும் மருதுகணேஷை வேட்பாளராக அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடை பெறவுள்ளது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. இதன்மூலம் பிளவுபட்டுள்ள அதிமுகவில் எந்த அணி மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள் ளது எனத் தெரியவரும் என்பதால் இந்தத் தேர்தல் மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன். 50,000 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!