வன்முறைக்கு எதிராக 40,000 டெல்லி மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

புதுடெல்லி: மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து புதுடெல்லியில் சுமார் 40,000 மருத்துவர்கள் நேற்று பணிக்குச் செல்வதைப் புறக்கணித் துப் போராட்டத்தில் குதித்தனர். மகாராஷ்டிராவில் நடை- பெற்று வரும் மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்- திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் புதுடெல்லி மருத்துவர்- களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.00 மணிக்குத் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்ததாக டெல்லி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்த மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லியில் உள்ள முன்னணி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மகாராஷ்டிராவில் சுமார் 3,000 அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!