‘தமிழகத்தில் இந்தி மொழியைத் திணித்தால் போராட்டம் வெடிக்கும்’

தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் கொல்லைப்புற வழி யாக தமிழகத்திற்குள் இந்தி மொழியைக் கொண்டு வர இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா அரசு துடிப்பதாக திமுக செயல் தலைவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்திக்கு மகுடம் சூட்டுவோம், தமிழை மட்டம் தட்டுவோம் என்ற போக்கில் மத்திய அரசு செயல் படுமேயானால் புதிய போராட்டக் களத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் எச்சரித்து இருக்கிறார். இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் முனை மழுங்காமல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இருக்கும் ஆங்கில எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின் றன. இந்தப் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

தமிழகத்தின் 75, 77 ஆகிய முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மைல்கற்களில் ஆங்கிலத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை அழித்துவிட்டு இந்தியில் எழுதும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது. காணொளிப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!