வெயிலால் நோய் அபாயம்

வேலூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. வேலூரில் மட்டும் நேற்று முன்தினம் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் வழக்கமான கோடை வெயிலைக் காட்டிலும் சற்றுக் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் கடைசி மற்றும் மே மாதங்களில் பதிவாகும் வெயில் அளவு, மார்ச் இறுதி வாரத்திலேயே பதிவாகியிருந்தது. ஏப்ரல் மாதத் தொடக்கம் முதல் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் உடல் சூடு அதிகரித்துப் பல்வேறு நோய்த் தாக்குதலுக்குப் பொது மக்கள் ஆளாகி வருகின்றனர். தமிழகத்திலேயே அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் வேலூர் மாவட்டம்தான். இந்த மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அரசு மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஊட்டி வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!