துக்கத்தை மறைத்து கணவர் மாண்ட செய்தியை வாசித்த பெண்

தமது கணவரின் மரணத்தை தாமே செய்தியாக வாசிக்க வேண்டிய துரதிருஷ்ட நிலைமை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிரபல ஐபிசி-24 தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் காலையில் சுப்ரீத் கவுர், 28, என்னும் செய்தி வாசிப்பாளர் சுமார் 15 நிமிடம் நீடிக்கக்கூடிய காலை 10 மணி இந்தி செய்தியை வாசிக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அவசரச் செய்தி ஒன்றை வாசிக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

'மகாசமுந்த் என்னுமிடத்தில் ரெனோ டஸ்டர் கார் மீது மற்றொரு வாகனம் மோதியதில் காரில் பயணம் செய்த மூவர் மாண்டனர், இருவர் காயமுற் றனர்' என்பதுதான் அவர் வாசித்த செய்தி. விபத்து நடந்த இடத்தையும் காரையும் பொருத்திப் பார்த்த சுப்ரீத், தமது கணவர் ஹர்சத் கவாடே மாண்ட செய்தியைத் தான் படித்துக்கொண்டு இருக் கிறோம் என்பதை உணர்ந் தார். செய்தித் தயாரிப்புப் பிரி வினருக்கும் அது சுப்ரீத்தின் கணவர் என்று ஓரளவு தெரிந் திருந்தும் செய்தியை சுப்ரீத் நேரடியாக வாசித்துக் கொண் டிருக்கையில் குறுக்கிட வேண் டாம் என்று விவரங்களை அவரிடம் தெரிவிக்கவில்லை. கணவர் மாண்ட துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் பத்து நிமிடத்துக்கு மேல் மற்ற செய்திகளை வாசித்து முடித் தார் அப்பெண்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!