ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: பாமக முடிவு

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார். "ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நேர்மையாக நடந்துகொள்வதைப் போலக் காட்டிக் கொண்டாலும், இரு அரசுகளுமே மக்களை ஏமாற்றுகின்றன," என்று அன்புமணி கூறியுள்ளார். இதற்கிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்துவது என அவ்வட்டாரத்தைச் சேர்ந்த 70 கிராமங்கள் முடிவு செய்துள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!