சென்னைக்குப் புயல் எச்சரிக்கை

சென்னை: அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சென்னை, நாகை, கடலூர், ராமேசுவரம் பாம்பன் பகுதிகளில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மழையில்லாமல் தவித்து வருகிறது. எப்போது மழை வரும் என விவசாயிகளும் பொதுமக்களும் வானத்தைப் பார்த்துக் காத்துள்ளனர். இந்த நிலையில் புதிய புயல் சின்னம் மழையைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.