போர்க்கப்பலுக்கு வரவேற்பு

சென்னை: சென்னை துறை முகத்தை ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க்கப்பல் வந்து சேர்ந்ததும் அங்கு கூடியிருந்த ஏராளமான மாணவர்கள் ஆரவாரத்துடன் வர வேற்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி மும்பையில் நடந்த விழாவில் ‘ஐஎன்எஸ் சென்னை’ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் போர்க் கப்பல் நேற்று சென்னைத் துறை முகம் வந்தடைந்தது.

அப்போது மாணவ, மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் போர்க்கப்பலை வர வேற்றனர். இந்த அதிநவீன ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க்கப்பல் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. மொத்தம் 7,500 டன் எடை கொண்ட போர்க்கப்பலின் நீளம் 173 மீ. அகலம் 14.3 மீ. தரையிலிருந்து கரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக் கும் ‘பிரமோஷ்’ ஏவுகணை, வானத்தில் இலக்கைத் தாக்கி அழிக்கும் ‘பராக்’ ஏவுகணை ஆகியவை கப்பலில் வைக்கப் பட்டுள்ளன.

போர்க்கப்பலை இசைக் கருவிகளை வாசித்தும், கொடிகளை அசைத்தும் வரவேற்ற மாணவிகள். படம்: ஊடகம்