திட்டமிட்டு கட்சிகளை உடைக்கிறது பாஜக: திருநாவுக்கரசர்

தஞ்சை: தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக திட்டமிட்டு கட்சிகளை உடைத்தும், சின்னத்தை முடக்கியும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில எம்பிக்களுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார். “தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை குடிநீர் பஞ்சத்தை போக்கக்கூட போதாது,” என்றார் திருநாவுக்கரசர்.