பள்ளிக்கூடம் போகாத ‘கலெக்டர்’; சிரித்து விளையாடும் ‘சிம் கார்ட்’

அதிபர் ஆடு மேய்க்கப் போய் இருக்கிறார்... மளிகைச் சாமான்கள் வாங்க பிரதமர் கடைக்குப் போயிருக்கிறார்... இப்படியெல்லாம் சொன்னால் ஏதோ புதுமையாகத் தெரிகிற தல்லவா-? இப்படித்தான் அதிபர், பிரதமர், கலெக்டர், ஹைகோர்ட் என புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு விசித்திரப் பெயர்களைச் சூட்டி வருகிறது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். நகர்ப் பகுதிகளிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ராம்நகர் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசயம் நடக்கிறது. இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 500 பேர்தான். காஞ்சர் சமூகத்தைச் சேர்ந்த அவர்களில் பலரும் பள்ளிக்கூடம் சென்றதில்லை என்பதால் படித்த அதிகாரிகளின் பதவிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அந்தப் பதவிகளின் பெயரையே பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ் கிறார்கள். ஐம்பது வயதாகும் ஒருவரின் பெயர் கலெக்டர். ஆனால் பள்ளிக்கூடம் பக்கம் அவர் ஒதுங்கியதுகூட இல்லை. தமது கிராமத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவரால் ஈர்க்கப்பட்டு தமது பாட்டி வைத்த பெயர் அது என்கிறார் கலெக்டர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!