‘இப்படி ஒரு மோசமான தீர்ப்பை இந்த நீதிமன்றம் கண்டதில்லை’

சென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பொன்னி யம்மன் கோயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சுப்பி ரமணி என்பவர் கொலை செய் யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சிபுரம் 2வது அமர்வு நீதி மன்றம் ஐவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய எஸ்.நாகமுத்து, என்.சேஷசாயி ஆகிய நீதிபதி களைக் கொண்ட அமர்வு, “உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தண்டனை விதித்தது அரசியல் சாசனத் திற்கு எதிரானது,” என்று கண்டனம் தெரிவித்தது.

“இதுவரை இந்த நீதிமன்றம் இத்தகைய ‘மோசமான தீர்ப்பை’ கண்டதில்லை,” என்று கூறிய நீதிபதிகள், “ஒரு நீதிமன்றம் எப்படி தீர்ப்பு எழுதக்கூடாது என்பதற்கு இதுவே உதார ணம்,” என்று கூறி கீழ்நீதி மன்றத் தீர்ப்பைக் கண்டித்தனர். ‚“உறுதியான ஆதாரங்கள், ஐயத்திற்கிடமில்லாத சாட்சியங் கள் ஆகியவற்றின் அடிப்படை யிலேயே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர இவை எதுவுமின்றி எந்த சமூகப் பிரிவைச் சார்ந்தவர்கள், பின்னணி என்ன என்பதைப் பார்த்து தீர்ப்பளிக்கக்கூடாது,” என்று கூறி ஐவரையும் விடுதலை செய்தனர்.