வெயிலின் கொடுமை; மின்விசிறியில் காற்று வாங்கும் சிறுத்தை

கட்டாந்தரையில் முட்டை பொரிப்பது, மீன் வறுப்பது என்று இணையவாசிகள் வெயிலின் கொடுமையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்தியா வின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நேரு விலங்கியல் தோட்டத்தில் உள்ள விலங்குகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப் பதற்கு விலங்கியல் தோட்டத்தில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூண்டு களுக்கு அருகே மின்விசிறிகள் அமைப்பது, அவ்வப்போது விலங்குகளின் மீது நீரைப் பாய்ச்சி அடிப்பது போன்ற செயல்களை விலங்கியல் தோட்ட ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி