வாக்கு மோசடிப் பிரச்சினைக்கு தேர்தல் ஆணையத்தின் தீர்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மீதான சந்தேகம் வலுத்துவரும் வேளையில் செலுத்திய வாக்குக்கு அச்சிட்ட ஒப்புகைச்சீட்டு அளிக் கக்கூடிய 'விவிபிஏடி' இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. விவிபிஏடி இயந்திரம் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். தேர்தல் ஆணையம் கோரும் வடிவமைப்புடன் இந்த இயந் திரங்களை அரசுடைமை நிறுவனங்களான பெல், இசிஐஎல் ஆகியன தயாரிக்க உள்ளன.

2019ஆம் ஆண்டுக்குள் இரண்டு தவணைகளாக இந்த இயந்திரங் களை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொள்ளத் திட்டமிடு கிறது. இவற்றைத் தயாரிப்பதற்கான செலவு ரூ. 3,173.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர் தலுக்கு முன்பாக இந்த இயந் திரங்களைப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தின் நேர்மைத் தன்மை மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கு செலுத்தியதும் வாக்கு செலுத்திய சின்னம் உள்ளிட்ட தகவல்களடங்கிய அச்சிட்ட ஒப்புகைச்சீட்டை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடியது விவிபிஏடி இயந்திரம். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!