ஓபிஎஸ் நிதி அமைச்சர் ஆகலாம், முதலமைச்சர் ஆகவே முடியாது: இபிஎஸ் அணி சூசகம்

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுகவின் இருண்டு அணிகளும் தேர்தலை சந்தித்ததால் தோல்விதான் மிஞ் சும் என்பது இரண்டு அணிகளுக் கும் தெரியும். இதனையடுத்து இரண்டு அணி களும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளன. முதலமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி இந்த இரண்டும்தான் ஓபிஎஸ் அணியால் வைக்கப்படும் பிரதான கோரிக்கை என அரசியல் வட்டாரத்தில் பேசப் படுகிறது. எடப்பாடி தரப்பு முத லமைச்சர் பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், இதனை பிரதி பலிக்கும் விதமாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் சேத்துப்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். "ஓ.பன் னீர்செல்வத்துக்காக எனது நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கி றேன்," என்றார். அவருக்கு முதல் வர் பதவி தரமுடியாது என்பதை ஜெயக்குமார் மறைமுகமாக தெரி வித்துவிட்டார் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!