வேடிக்கையான புகார்: முதல்வர் கிண்டல்

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை அளவு அதிகரித் துள்ளது என்றும், தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என்றும் திரும்பத் திரும்ப கூறுவது வேடிக்கை யாக உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே குறைந்த அளவு கடன் வைத்துள்ள முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று அவர் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளார். “தூங்குபவர்களை எழுப்ப லாம். ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த விவரங்களை தமிழக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். “அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்கிற அச்சம், பொறாமையின் காரணமாக ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார்,” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.