எஸ்வி சேகர்: தமிழர்கள் ஏன் இந்தி மொழி கற்கக்கூடாது?

சென்னை: தமிழக மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? என்று நடி கரும் முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான எஸ்வி சேகர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்து நாளிதழுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், "இந்திக்கு எதிரான போராட்டத்தை திமுக முன் எடுத்துள்ளது. ஆனால் நான் கேட்பதெல்லாம், தமிழகத்தைத் தவிர பிற தென்னிந்திய மாநி லங்களில் எல்லாம் இந்தி பேசு கிறார்கள், புழக்கத்தில் உள்ளது. "ஆனால் நாம் மட்டும் 4 தலை முறைகளாக அதை கற்காமல் இருக்கிறோம். மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது? அதுவும் ஒரு மொழி என்று நாம் ஏன் ஏற்க கூடாது?

"மேலும் இந்தி திணிப்பு மட்டுமல்ல விவசாய பிரச்சினை என எதை எடுத்தாலும் மோடியை திட்டுவதற்கு ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. மோடியே அடிப்படை யில் கடலை சாகுபடி செய்யும் விவசாயி என்பதை இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். "ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வந்து செவிமடுத்து குறைகளைக் கேட்டாரா? "பிரதமர் மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க இங்கு ஒரு கூட்டம் உள்ளது," என்று எஸ்வி சேகர் காட்டமாகப் பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!