நீதிபதி கர்ணனுக்கு மனநிலைப் பரிசோதனை

நடத்த உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதி பதிகளும் தன் முன் முன்னிலை யாக வேண்டும் என்று உத்தரவிட்ட கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலைக் குறித்துப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பதில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தச் சோதனையை கோல் கத்தாவில் உள்ள அரசு மருத்துவ மனையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழ கத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமர், அதிபர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார். இதையடுத்து இதனை நீதி மன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதி மன்றம் தாமாக முன்வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் நேரில் முன்னிலையாகாத தால் அவரை முன்னிலைப் படுத்தும்படி மேற்குவங்க காவல் துறையினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளும் தன் முன் முன்னி லையாக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதி களும் வெளிநாடு செல்ல அனு மதிக்கக் கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி களுக்கு உத்தரவிட்டும் அடுத் தடுத்து உத்தரவுகளை நீதிபதி கர்ணன் பிறப்பித்தார். சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டும் குற்றச்சாட்டுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் தண்டனை உண்டு என்றும் திரு கர்ணன் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந் தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகார் தலைமையிலான அமர்வு, வரும் 4ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலைக் குறித்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஏழு உச்ச நீதி மன்ற நீதிபதிகளை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதி கர்ணன் நேற்று அதிரடியாக பதில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீதிபதி கர்ணன். கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!