பள்ளி ஆசிரியர்களின் படங்களை சுவரில் மாட்ட உ.பி. முதல்வர் உத்தரவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத் தின் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக் குச் செல்ல அடம்பிடிக்கின்றனர். இதனால் அம்மாநிலத்தின் பல பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள் இன்றி செயல்பட்டு வருகின்றன. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற மறுநாளே தலைநகர் லக்னோவில் உள்ள காவல் நிலை யங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். “உ.பி.யில் சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பதே அரசின் தலை யாயக் கடமை. ஆளும் கட்சியினர் உட் பட யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுங்கள்,” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அடுத்ததாக “மாநில அரசு ஊழியர்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இல்லையெனில் விலகிவிடலாம்,” என்று அறிவித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் அதிக நாட்கள் செயல் படும் வகையில் பிரபல தலைவர் களின் பிறந்த நாள், மறைந்த நாட்களுக்காக வழங் கப் பட்ட 15 பொது விடுமுறைகளை நீக்கினார். தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனம் அரசுப் பள்ளிகள் மீது திரும்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பெரும் பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாகப் பள்ளிக்கு வருவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

அந்தப் பள்ளிகளின் ஆசிரி யர் கள் சொற்ப ஊதியத்துக்குப் போலி ஆசிரியர்களை நியமித் துள்ள தாகக் கூறப்படு கி றது. பல பள்ளிகளில் உண் மையான ஆசிரி யர்கள் யார் என்பதே மாணவர் களுக் குத் தெரிய வில்லை. ஆசிரியர்களுக்கு ஒழுக்கத் தைக் கற்றுக் கொடுக்கும் வகை யில் அரசுப் பள்ளிகளின் சுவர்க ளில்ஆ சிரியர்களின் படங்களை மாட்ட முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.