கைபேசியும் காதுமாகத் திரியும் பெண்களுக்கு ரூ.21,000 அபராதம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான மதுராவில், நேற்று பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். "கைத்தொலைபேசியை காதில் வைத்தவாறு கதைபேசிக்கொண்டு சாலையில் திரியும் பெண்களுக்கு 21,000 (S$400) ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பெண் களின் கவ னக்குறைவைப் போக்கவே இந்த உத்தரவைப் பஞ்சாயத்து உறுப்பினர் கள் பிறப்பித்துள்ளனராம்.

அதே போல் மதுராவில் மது விற்பனை செய்தால் 1.11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப் பட்ட தாகக் கூறப்படுகிறது. "பசுவை வதை செய்வோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம்". இந்த உத்தரவுகள் அனைத்துக் கிராம மக்களின் சம்மதத்துடன் பிறப்பிக் கப் படும்," என்று கிராமப் பஞ் சாயத்துத் தலைவர் தெரிவித் துள் ளார். இந்த உத்தரவுகளால் தற் போது மதுரா கிராமம் பிரபலமாகி விட்டது. கடந்த 2014ல் மதுரா வில் நாடாளுமன்றத் தேர்தலின் போது சாலைகள் அமைக் கப்பட வில்லை என்பதற் காக 2,000 பேர் தேர்தலில் வாக் களிக்கவில்லை. எனவே, அதிரடி காட்டுவது இது மதுராவுக்குப் புதிதல்ல.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா கிராமத்தில் நடந்த பஞ்சாயத்துக் கூட்டம். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!