கேரள அரசுக்கு அபராதம்

புதுடெல்லி: கேரளாவில் உம்மன் சாண்டி தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியில் காவல்துறை டிஜிபியாக இருந்த சென்குமார், பின்னர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் நீக்கப் பட்டார். இதற்கு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும் கோயில் வெடி விபத்தைத் தடுக்கத் தவறி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு பதவி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக கேரள தலைமை செயலாளர் விளக்கம் அளிக்கவும் ரூ. 25,000 அபராதம் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.