பாஜக எம்எல்ஏ கண்டித்ததால் கண்ணீர்விட்ட பெண் அதிகாரி

கோரக்பூர்: ஹரியானா மாநிலத்தில் கோரக்பூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ ஒருவர், தனது தொகுதியில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியை கண்டித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பரவி வருகிறது. மதுபானங்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கலைக்க முயற்சி செய்தபோது அந்த பெண் அதிகாரி மிரட்டப்பட்டார். "உன்னுடைய எல்லையை மீறாதே," என்று எம்எல்ஏ ராதா மோகன் கோபத்துடன் ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகாமிடம் கூறு கிறார். அதையடுத்து நிகாம் தனது கண்களிலிருந்து வழியும் கண் ணீரை துடைத்துக்கொள்கிறார்.

இது குறித்து செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது பதில் அளித்த ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகாம், "நான் அழவில்லை, அது எனது பதவிக்கு அழகல்ல. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு விட் டேன்," என்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பு எம்எல்ஏ தலைமையிலான கூட்டத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்த மதுபானக் கடை மூடச் செய்தனர். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்த மதுபானக் கடையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

எல்லையை மீறாதே என்று திரும்ப திரும்பக் கூறி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ ராதா மோகன் தாஸ்(இடம்) கண்டித்ததால் ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகாம் கண்ணீர்விட்டார். படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!