12 மணி நேர அறுவை சிகிச்சை, ஆறு முறை மாரடைப்பு: உயிர் பிழைத்த அதிசய குழந்தை

இதயக் கோளாறுக்காக 12 மணி நேர அறுவை சிகிச்சை, அதன்பின் ஆறு முறை மாரடைப்பு. இத்தனைத் தடைகளைத் தாண்டியும் உயிர் பிழைத்ததால் அதிசய குழந்தை யாகப் பார்க்கப்படுகிறாள் இந்தியா வின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாதமே நிரம்பிய விதிஷா. கல்யாண் நகரைச் சேர்ந்த வினோத் வாக்மாரே - விசாகா தம்பதியரின் மகளான விதிஷா வுக்குக் கடந்த இரு மாதங்களாக மும்பையின் பரேல் பகுதியில் உள்ள பி.ஜே.வாடியா மருத்துவ மனையே இல்லமாக இருந்து வருகிறது.

"விதிஷா 45 நாள் குழந்தையாக இருந்தபோது, ஒருநாள் நான் உணவூட்டிய பிறகு அதை வாந்தி எடுத்து, மயங்கிவிட்டாள். உலுக்கி னால் விழித்துக்கொள்வதும் பின் மீண்டும் மயக்கமடைவதாகவும் இருந்தாள்," என்றார் விசாகா. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவள் எடுத் துச் செல்லப்பட்டாள். அங்கு அவளை வாடியா மருத்துவமனைக் குக் கொண்டு செல்லுமாறு அறி வுறுத்தினர். வாடியா மருத்துவமனையில் விதிஷாவைப் பரிசோதித்தபோது, அவளது இதயத்தில் இரு முக்கிய ரத்தக் குழாய்கள் இடம் மாறி இருந்தது தெரியவந்தது.

நான்கு மாத மகள் விதிஷாவுடன் விசாகா. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!